திருப்பத்தூரில் ராமதாஸ் ஆதரவு வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து அறவழி போராட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி அருகே திருப்பத்தூர் கிருஷ்ணகிரி சாலையில் ராமதாஸ் ஆதரவு வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து மேற்கு மாவட்ட தலைவர் பிரகாசம் செயலாளர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் இந்த அறவழி ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இணை செயலாளர் ஸ்டீல் சதாசிவம் மாநில துணைத்தலைவர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு வன்னியர் சங்கமும் பாட்டாளி மக்கள் கட்சியும் பல ஆண்டுகளாக போராடி மக்களுக்கு ஆறு விதமான இட ஒதுக்கீட்டு பலன்களை பெற்றுக் கொடுத்திருக்கிறது. ஆனால் திமுக அரசு வன்னியர்களுக்கு வழங்க வேண்டிய 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்காமல் வஞ்சித்து எங்கள் பிள்ளைகளின் எதிர்கால கல்விக்கு கேள்விக்குறியாக நடந்து கொள்கிறது. அதேபோல் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி கண்டன உரையாற்றினர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட ராமதாஸ் ஆதரவு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
