அக்டோபர் 29, 2025 – இந்தியாவின் மிகப்பெரிய கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான சாம்சங், இன்று, இளைஞர் மாணவர்களுக்கு தங்களின் உள்ளூர் சமூகங்களிலுள்ள சவால்களுக்கு யதார்த்த உலக தீர்வுகளை உருவாக்கும் வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சவால் விடும் அதன் தேசிய
கல்வித் திட்டத்தின் நான்காவது பதிப்பான சாம்சங் சால்வ் ஃபார் டுமாரோ 2025-க்கான வெற்றியாளர்களை அறிவித்தது. வெற்றி பெற்ற முதல் நான்கு அணிகளான பெர்சிவியா (பெங்களூரு), நெக்ஸ்ட்பிளே.AI (அவுரங்காபாத்), பராஸ்பீக் (குருகிராம்), மற்றும் பிருத்வி ரக்ஷக் (பலமு) ஆகியவை INR 1 கோடிக்கான இன்குபேஷன்
வெகுமதிகளைப் பெற்றனர். மேலும், அவை IIT டெல்லியின் FITT லேப்களில், வழிகாட்டுதல் உதவியுடன் தங்கள் முன்மாதிரிகளை மேம்படத்தக்க யதார்த்த உலகிற்கான தீர்வுகளாக தொடர்ந்து உருவாக்கும். இந்த நடுவர் குழுவானது, சாம்சங் தலைமை மற்றும் கல்வித்துறை, அரசு மற்றும் தொழில்துறை
ஆகியவற்றிலிருந்து நிபுணர்களை ஒருங்கிணைத்து, ஒரு பாதுகாப்பான, அறிவார்ந்த மற்றும் அனைவருக்குமான பாரதத்திற்கான AI; இந்தியாவில் ஆரோக்கியம், சுகாதாரம், மற்றும் நல்வாழ்வுக்கான எதிர்காலம்; தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை; மற்றும் விளையாட்டு மற்றும்
தொழில்நுட்பம் மூலம் சமூக மாற்றம் ஆகிய நான்கு கருப்பொருள் பிரிவுகளில் இறுதிப் போட்டியாளர்களின் தீர்வுகளை மதிப்பீடு செய்தது. இவ்வாண்டின் சாம்சங் சால்வ் ஃபார் டுமாரோ நிகழ்ச்சியில், இந்தியா முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் நோக்கத்தை புத்தாக்கத்துடன் கலந்த, மனித சமுதாயத்தை மையமாகக் கொண்ட வலுவான யோசனைகளை வழங்கினர். முதல் முறையாக, இறுதிப் போட்டியாளர்கள் FITT-இன் நவீன R&D

 
			















