மயிலாடுதுறை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை கலைகட்ட துவங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இனிப்பகங்களில் மக்கள் ஆர்வமுடன் பல்வேறு வகையான ஸ்வீட் வகைகளை வாங்கி செல்கின்றனர். தொடர்ந்து பழமை மாறாமல் பல்வேறு ஸ்வீட் வகைகளை பாரம்பரியமான முறையில் இனிப்பகங்களில் செய்து மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள இனிப்பு பெட்டகங்களையும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்வதால் இனிப்பகங்களில் மக்களின் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. மேலும் தேன் திணை மாவு உருண்டை , எள்ளு உருண்டை , கேழ்வரகு உருண்டை , அதிரசம் மற்றும் சோமஸ் உட்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்த ஸ்வீட் வகைகளையும் தயாரித்து விற்பனை செய்வதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வீடுகளில் இனிப்புகளை செய்து சாப்பிடுவதில் மக்களுக்கு ஆர்வம் குறைந்துள்ளதால் பழமை மீட்டெடுக்கும் வகையில் இதுபோன்ற உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இனிப்பு வகைகளை வாடிக்கையாளர்கள் வாங்கி தங்களது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என விற்பனையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தொடர்பாக இனிப்பக உரிமையாளர் சிவலிங்கம் கூறுகையில் மக்கள் பழமையை மறந்து வருகிறார்கள். பழைய காலத்து உணவில் மனித உடலில் நரம்புகளுக்கும் எலும்புகளுக்கும் அதிக சத்து தரக்கூடிய தேன் தினை மாவு, கே உரு மாவு, சத்து மாவு, எள்ளு, மிளகு, பட்டை லவங்கை, உள்ளிட்ட சத்து நிறைந்த ஊட்டச்சத்து உணவுகளை தின்பண்டங்களாக தனது கைகளாகிலேயே பிசைந்து செய்து நமக்கு வழங்கினார்கள் நம் தாய்மார்கள். ஆனால் இந்த காலத்தில் இனிப்பகங்களை தேடிச் சென்று பொதுமக்கள் உணவுகளை வாங்கி செல்கிறார்கள். ஆனால் நாங்கள் நான்கு தலைமுறைகளாக சத்து நிறைந்த இனிப்பகங்களை தீபாவளி பண்டிகை பொங்கல் பண்டிகை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் செய்து தருகிறோம். என்னதான் நவீன கால எந்திரங்கள் மூலம் உணவுகள் செய்தாலும் பழங்கால முறைப்படி மாவுகளை கைகளாலேயே பிசைந்து உருட்டி சத்து நிறைந்த இனிப்புகளை செய்து வருகிறோம். இதனால் இந்த தின்பண்டங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இனி வரும் காலங்களில் குழந்தைகள் கள்ள மிட்டாய் எள்ளுருண்டை, திணை உருண்டை, முறுக்கு திணை அதிரசம், தேன் பேரிச்சை கலந்து உருண்டை உள்ளிட்ட இது போன்ற உணவுகளை அருந்தி தனது உடலை வலுப்படுத்த வேண்டும் என தாய்மார்களுக்கு அறிவுறுத்தினார்.
