மயிலாடுதுறை திரு இந்தளூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ மதுர காளியம்மன் ஆலயத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் சார்பில் இசைக்கலைஞர் சுசீந்திரன் தலைமையில் ஆயுத பூஜை விழா சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டது. தொடர்ந்து நாட்டுப்புற கலைஞர்களின் கருவிகளான பம்பை , உடுக்கை , நாதஸ்வரம் , தவில் , காளி நடன ஒப்பனை பொருட்கள் , பறை இசை உள்ளிட்டவற்றை படைத்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் நாட்டுப்புற கலைஞர்கள் நாதஸ்வரம் மற்றும் மேலும் உள்ளிட்டவற்றை வாசித்து சுவாமியை வழிபட்டனர். இதில் ஏராளமான நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
