மன்னாா்குடியில் DMKஅரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் சேலம் கோவிந்தன் என்பவர் குடுகுடுப்பை அடித்தபடி ஜெக்கம்மா சொல்றா என நூதன பிரச்சாரம்

திமுக அரசின் சாதனைகளை விளக்கி தலைமை கழக பேச்சாளர் சேலம் திமுக உறுப்பினர் குடுகுடுப்பை கோவிந்தன் என்பவர் திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடையே நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னாா்குடியில் காந்தி சாலையில் திமுக தலமைகழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் குடு குடுப்பைக்காரன் வேடத்தில் திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடையே நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் வழங்கும் உதவித்தொகை தொழில் வளர்ச்சிகள் மகளிர் உரிமைத்தொகை போன்றவைகளை கொடுத்தவர் நம்ம முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று குடுகுடுப்பை அடித்தபடி ஜக்கம்மா சொல்றா ஜெக்காம்மா சொல்றா வரும் தேர்தலில் தமிழ்நாட்டு முதல்வராக மீண்டும் மு கஸ்டாலின் தான் வருவார் என்று ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா திருவாரூர் சட்டமன்ற நான்கு தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா என்றும் நூதன பிரசாரத்தை மேற்கொண்டார் பிரச்சாரத்தின் போது நகர்மன்ற தலைவர் மன்னை த.சோழராஜன், மாவட்ட தொண்டரணி துணைஅமைப்பாளர் பழனிச்செல்வன் , நகர மாணவரணி அமைப்பாளர் பழனியப்பன் , நகர ஐடிவிங் செயலாளர் பாலகுமாரன் நகர துணைசெலாளர்கள் வெங்கடேஸ்வரன் , துரை நடராஜன் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Exit mobile version