கோபியில் இனிப்புகள் வழங்கி இளைய தளபதியின் தளபதிகள் உற்சாகம்!

ஈரோடு மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலைய வளாகத்தில் மிகப்பிரம்மாண்டமான கொண்டாட்டங்கள் நடைபெற்றன. தமிழகத்தின் புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்காலக் களப்பணிகளை முன்னிலைப்படுத்தும் வகையில் இந்த விழா ஒருங்கிணைக்கப்பட்டது. இந்நிகழ்விற்குத் திருப்பூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமா அவர்கள் தலைமை தாங்கி, கட்சியின் கொள்கை விளக்கத் தலைவர்களின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்கத்தை உற்சாகமாகக் கொண்டாடினர்.

இந்த எழுச்சியான நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்டச் செயலாளர் பிரதீப் குமார் முன்னிலை வகித்தார். மேலும், ஈரோடு மாவட்ட முன்னாள் ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், கோபி முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் செல்வம் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான குறிஞ்சிநாதன், அருள் ராமச்சந்திரன், வாசுதேவன், ஜி.ஆர்.இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவில் கோபி தமிழ்செல்வி, சத்தியமங்கலம் தமிழ்ச்செல்வி, சோன்பப்படி செல்வம், காளியப்பன், கார்த்தி, விஜய் (எ) விஜயகுமார், கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் மற்றும் கோபி நகர கிழக்கு மகளிர் அணி செயலாளர் சிந்து உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர். கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முழுவதும் கட்சித் தொண்டர்களின் முழக்கங்களாலும், பொதுமக்களின் பங்கேற்பாலும் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வோம் என இந்த விழாவின் வாயிலாக நிர்வாகிகள் உறுதியளித்தனர்.

Exit mobile version