“இது என்ன பாலத்துக்கு வந்த சோதனை” புலம்பும் வாகன ஓட்டிகள்.

போபால் (மத்தியப் பிரதேசம்): போபாலின் ஐஷ்பாக் பகுதியில் கட்டப்பட்ட புதிய ரெயில்வே மேம்பாலம் (ROB), பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது. ஆனால், இந்த பாலத்தின் வடிவமைப்பு தொடர்பாக புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

90° திருப்பம் – வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி!

இந்த மேம்பாலத்தில் ஒரு பகுதியில் 90 டிகிரி கோணத்தில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மேம்பாலத்தின் மீது செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பிடித்த பிடியில் திரும்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இது, விபத்து அபாயத்தை பெரிதும் உயர்த்தும் என்று வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வைரலான புகைப்படம் – உடனடி நடவடிக்கை

இந்த மேம்பாலத்தின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதும், பொதுமக்களிடையே பெரும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, பொதுப்பணித் துறை அமைச்சர் ராகேஷ் சிங், உடனடியாக சீரமைப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் கூறியதாவது:

ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம்

இந்தப் பாலம் உருவாக்கப்பட்டபோது, ரயில்வே துறை இந்த 90° திருப்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இடப்பற்றாக்குறை காரணமாக மாற்ற முடியவில்லை என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகனங்கள் சுவர் மீது மோதும், அல்லது எதிர்பக்கம் வருவோருடன் நேருக்கு நேர் மோதும் அபாயம் தற்போதைய அமைப்பில் அதிகம் உள்ளது. இதனால் சரியான வடிவமைப்பு மாற்றம் இல்லையெனில், பெரும் விபத்து மற்றும் மனித உயிர் சேதம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

Exit mobile version