நான் கிங்காக இருப்பேன் என விஜய் பேசுவதை நிறுத்த வேண்டும் என திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிமுககூட்டத்தில் MP.சசிகாந்த்செந்தில் பேட்டி

நான் கிங்காக இருப்பேன் என விஜய் பேசுவதை நிறுத்த வேண்டும் என்றும், இங்கு அனைவரும் இந்திய குடிமகன்களாக மாறிவிட்டதால் மக்களுக்கு நல்லதை செய்யுங்கள் என திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிமுக கூட்டத்தில் எம்பி சசிகாந்த் செந்தில் பேட்டி

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவராக வழக்கறிஞர் ஆர்.சசிகுமார் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து தலைவர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.இதில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் உட்பட மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட வடக்கு மாவட்ட தலைவர் ஆர்.சதிகுமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி சசிகாந்த் செந்தில், இந்தியா முழவதும் ஆழ்ந்த கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அகில இந்திய தலைமை அறிவுறுத்தலின்படி 74 மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிமுக எதிர்பார்த்த அனைத்தும் தோல்வியையே தழுவியிருப்பதால் அவர்கள் கண்டதை பேசுவதாகவும், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி சித்தாந்த கூட்டணி என்றும், வரும் தேர்தலில் அதிமுக 210 இடங்களில் தனிபெரும்பான்மையான இடத்தை கைப்பற்றும் என எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த எம்பி சசிகாந்த் செந்தில், அதிமுக கூட்டணி எல்லா விஷயத்திலும் தோல்வி தான் எனவும்,ஓட்டுக்கள் சாயுமா என அதிமுகவின் பேச்சுகள் இனி அதிகளவில் இருக்கும் எனவும், ஆனால் ஒட்டுக்கள் சாயாது எனவும் தெரிவித்தார். மேலும், கிங், கிங்மேக்கர் என பேசுவதை விஜய் நிறுத்த வேண்டும், அதெல்லாம் போய் ரொம்ப நாளாகிறது, எல்லோரும் சிட்டிசனாக (குடிமகன்களாக) மாறி விட்டனர், யாரும் கிங்குக்கு கீழ் வாழ ஆசைப்படவில்லை எனவும், நல்ல அரசியல் செய்யுங்கள் எனவும், மக்களுக்கு நல்ல விஷயங்கள் செய்யுங்கள், அதற்கான வரவேற்புகள் உண்டு, இனிமேல் யாரும் கிங்காக மாற்ற போவதில்லை, நல்ல மக்கள் சேவகனாக மாற்றுவதற்கான முயற்சிகள் உண்டு எனவும் தெரிவித்தார். மேலும்,ரயில் நிலையங்களில் ஆங்கிலம் இருந்த இடத்தில் இந்தியை மாற்றி இருப்பது நெடுநாளாக இருந்த ஒரு விஷயம் தான், இந்தியையும், சமஸ்கிருதத்தையும் புகுத்துவது தான் நடந்து கொண்டிருக்கிறது; இதை ஒரு பாலிசியாகவும், பெருமையாகவும் ஒன்றிய அரசு செய்கிறது; இது இந்தியாவுக்கு நல்லது கிடையாது, அதற்கான எதிர்ப்புகள் அனைத்து பக்கத்திலிருந்தும் வரும் எனவும்,.நாளை பட்ஜெட்டில் ஏழை எளிய மக்களுக்கு சலுகைகள் எதுவும் இருக்காது என்றும் இருக்கும் சலுகைகளை பிரித்து எடுத்து பணக்காரர்களுக்கு கொடுக்கும் பட்ஜெட்டாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

பேட்டி திரு.சசிகாந்த் செந்தில்
திருவள்ளூர் எம்பி

Exit mobile version