கரூரில் டாஸ்மாக் மதுபான பார்களில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதை தடுத்து நிறுத்தக் கோரி நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி அளித்தனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.அப்பொழுது நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது,
கரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்த பார்களில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை செய்யப்படுகிறது. 12 மணிக்கு மதுபான கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பாக இரவு 10 மணிக்கு மேல் காலை 12 மணி வரை மதுபானம் பார்களில் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, 24 மணி நேரம் சட்ட விரோதமாக இந்த மது விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கரூர் மாவட்டத்தில் தொழிலாளர்கள் நிரந்தரமான மதுவுக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து கரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான பார்களில் விற்பனை நேரம் அல்லாத நேரங்களில் மது விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கடந்த 7 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் காளியப்பனுர் பகுதியில் மதுபான பாரில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக ஐந்து பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக டாஸ்மார்க் இயங்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எங்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளது இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தார்.
