எடப்பாடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் செங்கோட்டையன் ஒருங்கிணைப்பு குறித்து கண்டிப்பாக பேசுவேன் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

எடப்பாடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் செங்கோட்டையன் ஒருங்கிணைப்பு குறித்து கண்டிப்பாக பேசுவேன் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் புரட்சி பாரத கட்சியின் தலைவராக பூவை.ஜெகன்மூர்த்தி பொறுப்பேற்று 23 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செய்தியாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் கே. எம். ஸ்ரீதர், மாநில செயலாளர் பழஞ்சூர் வின்சென்ட், மாநில தொழிற்சங்க செயலாளர் மதிவாசன், ஒன்றிய செயலாளர் ஒதிக்காடு தாமஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிஞ்சிவாக்கம் சரவணன் உட்பட புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் கலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அவர் தமிழகத்தில் மும்முனை போட்டி தான் நிலவும் எனவும் உறுதிபட தெரிவித்தார். புரட்சி பாரதம் கட்சி தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் என பொது கூட்டங்கள் நடத்தப்படும் எனவும், தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் நடப்பதாகவும், ஆதிதிராவிட மாணவர்களுக்கான விடுதிகளை சமூக நீதி விடுதி என மாற்றியதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், சமூக நீதி விடுதி என மாற்ற என்ன அவசியம் எனவும், நாட்டில் சமூக நீதி இல்லை எனவும் அவர் தெரிவித்தார். தூய்மை பணியாளர்கள், அரசு ஊழியர்கள், காலி பணியிடங்களை நிரப்புவதாக கூறி ஆட்சிக்கு வந்து அவற்றை நிறைவேற்றவில்லை எனவும், மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் வாய்மொழியாகவும், விளம்பரத்திற்காகவும் சொல்கிறார்கள் எனவும், டிசம்பர் மாதத்திற்குள் மக்கள் நல கூட்டணி போன்று விஜய் தலைமையில் கூட்டணி நடக்க இருக்கிறது எனவும், திமுக கூட்டணியில் இருந்து நான்கு கட்சிகள் வெளியேறி திமுக கூட்டணி இல்லாமல் தனியாக இருக்கும் எனவும், அதிமுகவோடு கூடுதல் கட்சிகள் இணையும் எனவும், தமிழகத்தில் மும்முனை போட்டிகள் நிலவும் எனவும், யார் வெற்றி என்பது மக்கள் கையில் உள்ளது எனவும், அதிமுக தவிர தொடர்ந்து ஆட்சிக்கு வர எந்த கட்சியும் வராது அதிமுக மட்டும் தான் வரும் எனவும், தற்போது வரை அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். புரட்சி பாரதம் யாருடன் கூட்டணி என்பதை ஜனவரி மாதத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் எனவும், கூடுதலாக இடங்களை கேட்டு பெறுவது எனவும், செங்கோட்டையன் விவகாரம் குறித்து கூட்டணி மட்டுமே உள்ளதாகவும், உட்கட்சி விவகாரம் எனவும் அவர் தெரிவித்தார். ஓபிஎஸ், செங்கோட்டையன் தனி கட்சி ஆரம்பித்தால் மக்கள் தான் பார்க்க வேண்டும் எனவும், அதிமுக ஒன்றிணைந்தால் ஊர் கூடி தேர் இழுப்பது சிறந்தது, அது நடந்தால் நல்லது எனவும் அவர் கூறினார். விஜய் கூட கூட்டணியா என்ற கேள்விக்கு தேர்தல் வர இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறது எனவும், விஜய் சுற்றுப்பயணம் அரசியல் தலைவராக சரி எனவும் அதற்கு வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்த அவர், எதிர்கட்சிகளை ஒடுக்க நினைப்பது ஆளுங்கட்சிக்கு இயல்பு எனவும் அதுதான் விஜய்யின் சுற்று பயணத்திற்கும் நடக்கிறது என்றும் தெரிவித்த அவர், விசிக ஏர்போர்ட் மூர்த்தி இடையிலான போட்டி குறித்த கேள்விக்பு விமர்சனங்களை தாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளாத முடியாதவர்கள் தான் சண்டை போடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். நயினார் நாகேந்திரன் செயல்பாடுகள் அவர் தமிழக தலைவராகவும் தேசிய கட்சியின் அவர் பயணித்து வருகிறார் எனவும், டிடிவி குறித்த கேள்விக்கு நயினாரிடம் தான் கேட்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் செங்கோட்டையன் இணைப்பு குறித்து கண்டிப்பாக வலியுறுத்துவேன் எனவும் அவர் தெரிவித்தார்.

பேட்டி : பூவை.ஜெகன்மூர்த்தி – புரட்சி பாரத கட்சியின் தலைவர்.

Exit mobile version