OPS உடனான சேகர் பாபு சந்திப்பு ஒருவேளை DMKஅணிக்குOPS-ஐ இழுப்பதாக கூட நான் கருதுகிறேன். முடிவு

ஓ.பி.எஸ்., உடனான சேகர் பாபு சந்திப்பு ஒருவேளை திமுக அணிக்கு ஓ.பி.எஸ்., -ஐ இழுப்பதாக கூட நான் கருதுகிறேன். முடிவு என்ன என்று எனக்கு தெரியாது.

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் எத்தனையோ பேர் கட்சி ஆரம்பித்துள்ளார்கள். ஆனால் புரட்சி தலைவர் ஆரம்பித்த அதிமுக தான் இன்றைக்கும் தமிழகத்தை ஆளப்போகும் கட்சியாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் தெரிவித்தார் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று கன்னியாகுமரியில் 150 அடி உயர தேசிய கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றினார். பா,ஜ.க., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். தமிழ்நாடு அரசு கைவிட்ட நிலையில் தேசிய கொடி பராமரிப்பு செலவை முன்னாள் எம்.பி., விஜயகுமார் நீதிமன்ற உத்தரவுபடி ஏற்று இன்றே கொடி ஏற்றப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், மகாதானபுரம் நான்கு வழிச்சாலை ரவுண்டானாவில் ₹75 லட்சம் செலவில் நிறுவப்பட்ட 150 அடி உயர பிரமாண்ட தேசியக்கொடி ஜூன் மாதம் 2022-லம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. தமிழகத்தின் மிக உயரமான கொடிக்கம்பங்களில் ஒன்றான இதில், 48 அடி நீளம் மற்றும் 32 அடி அகலம் கொண்ட தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது. இதனை முன்னாள் அதிமுக ராஜ்யசபா எம்.பி., விஜயகுமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைத்தார். விஜயகுமார் தற்போது பா.ஜ.க., உறுப்பினராக உள்ளார்.
தேசிய கொடியை தொடர்ந்து பராமரிக்க தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்காமல் இருந்த காரணத்தால் பராமரிப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டது. தேசிய கொடி ஏற்றாமல் இருந்த நிலையில், தொடர்ந்து தேசிய கொடியை ஏற்ற நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் தேசிய கொடி பராமரிப்பை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்த நிலையில் நீதிமன்ற உத்தரவை பெற்று விஜயகுமார் தனது சொந்த நிதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்ற ஏற்பாடு செய்துள்ளார். தொடர்ந்து பா.ஜ.க., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று கன்னியாகுமரியில் தேசிய கொடி ஏற்றினார். இது மிக உயரமான கொடிக்கம்பம் என்பதாலும் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதாலும் தேசியக்கொடி பறக்கும் போது சேதம் அடைய வாய்ப்பு அதிகம் இருப்பதால் பராமரிப்பு பணிகள் அதிகமாக வாய்ப்புள்ளது. இருப்பினும் அதனை ஏற்று தேசிய கொடியை பறக்கவிட ஆர்வம் காட்டும் முன்னாள் எம்பி.,க்கு நயினார் நாகேந்திரன் பாராட்டுக்களையும் வாழ்த்தையும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன்
அதே போன்று இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதால் ஏளனமாக நினைக்காதீர்கள் நாட்டை ஆளப்போகும் கட்சியாக இது மாறும் என்று வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் பேசினார். அதே போன்று இன்று மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைத்த கட்சியாக பா.ஜ.க., உள்ளது.

கூட்டணி குறித்து தேமுதிக நல்ல முடிவு எடுக்க வேண்டும்

திமுக எப்போதும் ஆளுநரை மட்டுமல்ல பெண்களையும் கேவலமாக பேசும் கட்சி. எல்லோரையும் அவமரியாதையுடன் நடத்தும் கட்சி திமுக., ஆ.ராசா பெண்களை எவ்வளவு கேவலமாக பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும்.

மக்கள் தெரிந்தோ தெரியாமலோ ஓட்டு போட்டு ஆளுங்கட்சியாக திமுக வந்தது ஆனால் அவர்கள் தேர்தல் அறிக்கை எதையும் செய்யவில்லை.

பழைய ஓய்வூதியம் கொடுப்பதாக கூறினார்கள் ஆனால் 5 ஆண்டு முடியும் போது போராட்டத்திற்கு தயாராக வந்த போது ஜூன் மாதம் தரப்போவதாக கூறியுள்ளார்கள். ஜூன் மாதம் திமுக இருக்கபோவதில்லை என்பது அவர்களுக்கு தெரியும், இது தான் திமுகவின் போலி முகம்.

மாநில சர்க்கார் மற்றும் மத்திய சர்க்கார் இணைந்து பணியாற்றினால் தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்ற அர்த்தத்தில் பேசினார்.

ஆனா நம்மளோட முதலமைச்சரும் நல்ல கண்ணியமாக பேசக்கூடிய ஆளுதான் வர வர இப்ப கண்ணியம் தவறி போய் இருக்கிறது. காரணம் தோல்வி பயம் அவங்களுக்கு தோல்வி பதட்டம் வந்திருக்கிறது. அதனால டப்பா எஞ்சினு சொல்றாங்க.

அது தேர்தல் முடிந்த பிறகு யாரு டப்பா எஞ்சின், எது ஒரிஜினல் என்ஜின் என்பது தெரியும் என அவர் தெரிவித்தார்

Exit mobile version