சென்னை :
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துவேக தலைவர் விஜயை மறைமுகமாக குறிவைத்து விமர்சனம் மேற்கொண்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். வாரத்தில் நான்கு முதல் ஐந்து நாட்கள் வெளியூரில்தான் இருப்பேன். வெறும் சனிக்கிழமையில்தான் வெளியில் வருபவன் அல்ல. ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட மக்களிடம் சந்திப்புகளை மேற்கொள்வேன்” என்று தெரிவித்தார்.
இது, தவெக தலைவர் விஜய் தற்போது ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் தேர்தல் பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருவதைக் குறிவைத்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதற்கு முன்பும், விஜய் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்திருந்த உதயநிதி, “ஒருவர் பச்சை பஸ்ஸிலும், மற்றொருவர் மஞ்சள் பஸ்ஸிலும் சுற்றி வருகிறார்கள். ஆனால், 2026 தேர்தலில் வெற்றி பெறப்போவது பிங்க் பஸ் தான்” எனச் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.