திருக்கடையூர் கோவிலில் சல்லடையில் சலிக்க சலிக்க வந்த பணம் குவியல் நூற்றுக்கணக்கானோர் என்னும் பணியில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் இங்கு ஆண்டுக்கு 365 நாட்களும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சிறப்பு தரிசனம் செய்து வருகின்றனர் மேலும் நாள்தோறும் ஆயுள் ஹோமம் சஷ்டி பூர்த்தி சதாபிஷேகம் கனகாபிஷேகம் மணி விழா உள்ளிட்ட சிறப்பு யாகம் கோமம் திருமணங்கள் நடைபெற்று வருகிறது
இப்படி சிறப்பு பெற்ற இக்கோவிலில் நாள்தோறும் பக்தர்கள் தங்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர் இந்நிலையில் 8 மாதத்தில் பக்தர்கள் அளித்த காணிக்கை உண்டியல்களில் உள்ள தொகை என்னும் பணி இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவில் வளாகத்தில் பெண்கள் பெரியவர்கள் மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் என்னும் பணியில் ஈடுபட்டனர் அப்பொழுது உண்டியலில் இருந்து எடுக்கப்பட்ட தொகை
பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி திறக்கப்பட்டு அதிலிருந்து சல்லடையில் கொட்டப்பட்டு பணம் சில்லறை காசு என சலித்து தனித்தனியாக எடுக்கப்பட்டது சல்லடையில் சலிக்க சலிக்க வந்த பண குவியல் மற்றும் சில்லறை காசுகள் இவற்றை நூற்றுக்கும் மேற்பட்டோர் தனித்தனியாக பிரித்து எடுத்தனர் இயந்திரம் கொண்டு பணம் என்னும் பணி நடைபெற்றது மேலும் காணிக்கையில் வெளிநாட்டு பணம் மற்றும் தாலி உள்ளிட்ட தங்க நகை வெள்ளி நகைகள் இருந்தது அவையும் தனியாக பிரித்து எடுக்கப்பட்டது
பின்னர் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பத்திரமாக வைக்கப்பட்டு பின்னர் வங்கி கணக்கில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
