மயிலாடுதுறை சித்தி விநாயகர் ஆலயத்தில் லட்சார்ச்சனை- புஷ்பங்களால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை

மயிலாடுதுறை சித்தி விநாயகர் ஆலயத்தில் லட்சார்ச்சனை. புஷ்பங்களால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை.

மயிலாடுதுறை சின்ன கடைவீதியில் புகழ் வாய்ந்த ஸித்தி விநாயகர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் புதிய வருட பிறப்பை முன்னிட்டு உலக நன்மை வேண்டி ஊர் செழிக்கவும் லட்சார்ச்சனை செய்யப்பட்டது. காலை லட்சார்ச்சனை நடைபெற்று, இரவு புஷ்பங்களால் புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. தொடர்ந்து பஞ்சமுக தீபாராதனை செய்யப்பட்டு நெய்வேதியம் படைக்கப்பட்ட மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் புஷ்பார்ச்சனையை கண்டு தரிசனம் செய்தனர்.

Exit mobile version