கன்னியாகுமரி மாவட்டம்: சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் அரசியலை அரசியலாக பார்க்க வேண்டும்- மத்திய அரசு தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை அந்த வரிசையில் தற்போது சென்சார் போர்டு கையில் எடுத்துள்ளது என கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளர்.
கன்னியாகுமரி மாவட்டம் மேல கிருஷ்ணமூர்த்தி பகுதியில் பொங்கல் தின விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான இளவட்ட கல் தூக்கும் போட்டி தமிழகத்தின் இரும்பு மனிதன் என போற்றப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த கண்ணன் தலைமையில் விழா நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்
பொங்கலுக்கு இரண்டு படங்கள் வெளியாக உள்ள நிலையில் அதில் தற்போது ஒரு படத்திற்கு மட்டும் தணிக்கை சான்று வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது. சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் அரசியலை அரசியலா பார்க்க வேண்டும். மேலும் மத்திய அரசு தேர்தல் ஆணையம் அமலாக்கத்துறை அந்த வரிசையில் தற்போது தணிக்கை குழுவையும் கையில் வைத்துள்ளது என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். தொடர்ந்து ஜனநாயகம் படம் தணிக்கை குழு சான்றிதழ் கொடுக்காததற்கு தணிக்கை குழு அறிக்கை வெளியிட வேண்டும். நீதிமன்றம் தீர்ப்பளித்தும் மேல்முறையீடு செய்திருப்பது வேதனை அளிக்கிறது என்று. செய்தியாளர்களுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்தார்.
