விழுப்புரத்தில் நடைபெற்ற என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சியில் பெண்களின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தமிழக முதலமைச்சர் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை வீடு வீடாக நிர்வாகிகள் சென்று திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
விழுப்புரம் நகரப் பகுதியான 19வது வார்டு பகுதியில் என் வாக்குச்சாவடி,வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அப்போது அவர் தெரிவிக்கையில், இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராக ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார் என்பதை நிர்வாகிகள் வீடு வீடாக சென்று திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்களை சந்தித்து இந்த ஆட்சியில் பெண்களின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதையும் இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு திகழ்வது எடுத்துரைக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் மத்திய பாஜகவின் நெருக்கடியிலும் பொருளாதாரத்தில் முதன்மை மாநிலமாக திகழ்வதை எடுத்துரைக்க வேண்டும் என தெரிவித்தார். இதில் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி மேற் பார்வையாளர் சரவணன் நகர செயலாளர் வெற்றிவேல் நகர மன்ற உறுப்பினர்கள் புருஷோத்தமன் வசந்த அன்பரசு உடன் இருந்தனர்
