தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகளை இணைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்க்க பிஜேபி தீவிரம் காட்டி வரும் நிலையில் ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை கூட்டணியில் சேர்க்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
அண்மையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி மத்தியமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சூழலில் மத்தியமைச்சர் அமித்ஷாவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லியில் இன்று சந்தித்து பேசினார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக நிச்சயம் இடம்பெறும் என்று டிடிவியிடம் அமித்ஷா உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
