விண்ணைத் தொட்ட தீச்சுவாலை – சினிமாவை விஞ்சிய காட்சி

ஆந்திர மாநிலத்தில், ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் கிணற்றில் 2-வது நாளாக தீப்பற்றி எரிவதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

கோனசீமா மாவட்டத்தில் உள்ள மல்லிகிபுரம் மண்டலத்தில், மோரி மற்றும் இருசுமண்டா கிராமங்களுக்கு இடையே, ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணற்றில், நேற்று எரிவாயு கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, குழாயில் பழுது நீக்கும் பணி நடைபெற்றது. அப்போது, எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது.

மக்கள் வசிக்கும் இடத்திலிருந்து, சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தென்னந்தோப்பில், தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக, மோரி மற்றும் இருசுமண்டா கிராமங்களைச் சேர்ந்த மக்களை, அதிகாரிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளனர். தீயைக் கட்டுப்படுத்த தொடர்ந்து, முயற்சி மேற்கொண்டு வருவதாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version