வாக்குறுதியை நிறைவேற்ற கோரிக்கை – ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

பள்ளிகளை புறக்கணித்து 12 வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருப்பத்தூர் மாவட்ட பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் சார்பாக சுமார் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர் ஆசிரியைகள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் இன்று 12 வது நாளாக பள்ளிகளை புறக்கணித்து 311 என் பொறித்த கருப்பு கிரீடம் அணிந்து நீதி தேவதை தராசு தட்டில் அடிப்படை ஊதிய பாகுபாடு விளக்கி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆர்பாட்டத்தின் போது,தமிழக அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலில் பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என 311வது வாக்குறுதி எண்ணில் உத்திரவாதம் அளித்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று தற்போது வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஒரே கல்வி தகுதி ஒரே பணி ஆனால் ஊதியம் மற்றும் வெவ்வேரா. கலந்திட வேண்டும் கலைந்திட வேண்டும் ஊதிய முரண்பாட்டை கலைந்திட வேண்டும் என கண்டன உரையாற்றி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version