துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் வைத்து சூரிய பகவானை மக்கள் வழிபட்டனர்.

விவசாயிகளுக்கு வாழ்வளிக்கும் நிலத்தில் அறுவடை செய்த புது நெல்லிலிருந்து பொங்கலிட்டு, சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டை உலகுக்கு உணர்த்தும் வகையிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இன்று பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பெண்கள் தங்களது வீடுகள் முன்பு வண்ண கோலங்கள் போட்டு பொங்கல் பண்டிகையை வரவேற்றனர்.மேலும் புத்தாடை உடுத்தி புத்தரிசியில் பொங்கலிட்டு சூரிய பகவானை வழிபட்டனர்.

Exit mobile version