கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, நியாயம் கிடைக்க வேண்டும் என்பது தான் த.வெ.க-வின் நிலைப்பாடு என்பதால், டெல்லி சி.பி.ஐ விசாரணையின்போது தங்கள் தரப்பு தகவல்களை தெரிவித்திருப்பதாக அக்கட்சியின் இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
சிபிஐ விசாரணை முடிந்து நடிகர் விஜய் சென்னை திரும்பிய நிலையில், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார், கரூர் பிரசாரத்திற்கு 607 போலீசார் பணியில் ஈடுபட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார். ஆனால், காவல்துறை அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் 500 போலீசார் என்று தெரிவிப்பதிலேயே முரண்பாடு உள்ளதாகக் கூறினார்.
