நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 28 ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்குகிறது. 29 ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். மறுநாள், பிப்ரவரி ஒன்றாம் தேதி இந்த ஆண்டிற்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில், பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து அனைத்து மாநில நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாரமன் டெல்லியில் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதில் தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு, தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

















