மதுரையில் வரும் 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க கூடிய பொதுக்கூட்டம் பாண்டி கோவில் அருகே உள்ள அம்மா திடலில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், கூட்டணி ஆட்சியில் நாங்கள் பங்கு கேட்கவில்லை என்றும், திமுக ஆட்சியை அகற்றுவதே தங்களது கூட்டணியின் இலக்கு என்றும் தெரிவித்தார்.

















