தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எவை என்பது பிரதமர் மோடி, வரும் 23-ம் தேதியன்று சென்னையில் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில தெரியவரும் என்று பிஜேபி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை வாரியம் சான்று வழங்காததற்கும், பிஜேபி-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திரைப்பட தணிக்கை வாரியம் என்பது ஒரு தன்னிச்சையான அமைப்பு என்று கூறினார். கரூரில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியதன் பேரில் விஜய் ஆஜராகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி வரும் 23-ம் தேதியன்று சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும், அன்றைய தினம் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
