குஜராத் மாநிலம் சோமநாதர் ஆலயத்தில் இன்று காலை தரிசனம் செய்த பிரதமர் மோடி, ராஜ்கோட்டில் நடைபெற்ற “துடிப்பான குஜராத்” என்ற மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார்.
உலக அளவில் நீடித்து வரும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில், மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது, இந்தியாவிடமிருந்து உலக நாடுகளின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருவதை தெளிவுபடுத்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்த அவர், விவசாய உற்பத்தி புதிய சாதனைகளை படைத்து வருகிறது என்றார்.
முன்னதாக, சோமநாதர் ஸ்வாபிமான் பர்வ் நிகழ்ச்சியில் பேசிய மோடி, சோமநாதர் ஆலயத்திற்கு எதிரான சக்திகள், வாள்களுக்குப் பதிலாக “வேறு தீய வழிகளில்” செயல்படுவதாக கூறினார்.

















