விழுப்புரம் நகர அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.,109 வதுபிறந்தநாள் விழா கொண்டாடம்…..

விழுப்புரம் நகர அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.,109 வதுபிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம் எம்.பி., தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் , மற்றும் அன்னதானம் வழங்கினார். நகர செயலாளர் பசுபதி வரவேற்றார். இதில், நகர செயலாளர் ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, ராமதாஸ், மாவட்ட பாசறை இணை செயலாளர் ஜியாவுதீன், நகர ஜெ., பேரவை செயலாளர் கிருஷ்ணன், வார்டு செயலாளர்கள் பாஸ்கர், ராம்குமார், நகர வர்த்தக அணி செயலாளர் ரகுராமன், ஜெயவேல், மாநில ஆவின் தொழிற்சங்கம் செயலாளர் செல்வம், கவுன்சிலர் கோதண்டராமன், முன்னாள் கவுன்சிலர் லாலா ராதாகிருஷ்ணன், காத்தவராயன், நகர மகளிரணி செயலாளர் கீதா, கலாமாலினி, நகர மாணவரணி செயலாளர் பார்த்தீபன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version