நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சார்பில் வலங்கைமானில் இருதய நோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமினை இரா.காமராஜ் தொடங்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் நடைபெற்ற மருத்துவ முகாமினை முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் மற்றும் சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் துவக்கி வைத்தார்..இன்று வலங்கைமான் பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் இருதய மற்றும் பொது மருத்துவம் சார்ந்த சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனைகள் செய்தனர். இந்த முகாமில் நோயாளிகளுக்கு.. ரத்த அழுத்தம், இசிஜி.. எக்கோ.. உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.. மேலும் நோயாளிகளுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.வலங்கைமான் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.இந்த நிகழ்வில்.. தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை நிர்வாக இயக்குனர்.. டாக்டர் இனியன், டாக்டர் இன்பம்,வலங்கைமான் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சங்கர் வலங்கைமான் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் இளவரசன் ஒன்றிய துணை தலைவர் வாசுதேவன் , பேருராட்சி செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்
