இடபிரச்சனையில் பழிவாங்க 77 வயது முதியவர் மீது பொய்புகார் – குற்றம்சாட்டப்பட்டவரின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

இடபிரச்சனையில் பழிவாங்க 77 வயது முதியவர் மீது பொய்புகார் அளித்து போக்சோ வழக்குப்பதிவு செய்ய காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி குற்றம்சாட்டப்பட்டவரின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மயிலாடுதுறை அருகே 77 வயது கணவர் மீது பொய்புகார் அளித்து போக்சோ வழக்கு பதிவு செய்ய திட்டமிட்டு சதி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மூதாட்டியான மனைவி சார்பில் உறவினர்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். தரங்கம்பாடி தாலுகா தலைச்சங்காடு மணவெளிதெருவை சேர்ந்த செந்தாமரை என்ற மூதாட்டியின் உறவினர்கள் செந்தாமரை பெயரில் அளித்த மனுவில் எங்கள் வீடு அருகே அரசு புறம்போக்கு நிலம் உள்ளதை நாங்கள் அனுபவித்து வந்த நிலையில் அதனை கைப்பற்றுவதற்காக எங்கள் ஊரை சேர்ந்த பிரகாஷ், பிரவீன் மற்றும் சிலர் அந்த இடத்தை வேலி வைத்து அடைத்தனர், அதனை எனது கணவர் சிவக்குமார்(77) தடுத்து ஊர் பஞ்சாயத்தில் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக ஊரில் பிரச்னை ஏற்பட்டு எங்களை ஊரைவிட்டு கடந்த 3 வருடங்களாக ஒதுக்கிவைத்துள்ளனர். என்னையும் எனது கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். இதனால் இடம் சம்பந்தமாக 3 வருடங்களாக பிரச்னை இருந்துவந்த நிலையில் 3வயது சிறுமிக்கு எனது கணவர் பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக பொய் புகாரை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் எதிர்தரப்பினர் அளித்ததால் எனது கணவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இடப்பிரச்னையில் எனது எதிர்தரப்பினர் திட்டமிட்டு பொய்வழக்கை புணைந்துள்ளனர். இது குறித்து உரிய விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version