என்கிட்டயா வம்பு பண்ற? – பாட்டியின் மண்டையை சுத்தியால் உடைத்த பெண்

சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பர்தா அணிந்துகொண்டு மூதாட்டியை சுத்தியலால் தாக்கிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருகம்பாக்கம் இந்திரா நகரைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ராணி, தனது கணவரின் சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு கடந்த வாரம் வந்துள்ளார். அப்போது கழிவறைக்கு சென்றபோது, ஏற்பட்ட மோதலில் பர்தா அணிந்தபடி வந்த ஒருவர் மூதாட்டியை சுத்தியலால் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளார். மூதாட்டி அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திய போலீசார், மூதாட்டிக்கு ஏற்கனவே அறிமுகமான தரமணியை சேர்ந்த இளம்பெண் நித்யா என்பவரை கைது செய்தனர். விசாரணையில், மூதாட்டியுடன் ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக, இளம் பெண் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

Exit mobile version