துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, முதல் போட்டியான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது.

முன்னதாக அவனியாபுரம் கிராம தேவதையான மந்தை அம்மன் கோவிலில் ஜல்லிக்கட்டு வாடிவாசல் அமைப்பாளர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட நடைமுறைகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதையத்து முதல் சுற்று வீரர்கள் களம் இறங்கினார். சீறிப் பாய்ந்து வரும் காளைகளை வீரர்கள் தாவிப் பிடித்து அடக்கி வருகின்றனர்.

வெற்றி பெறும் வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு போட்டி வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் டிஜிட்டல் ஸ்கோர் போர்டு வைக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு சுற்று முடிவுகள் ஸ்கோர் போர்டு மூலம் அறிவிக்கப்படுகின்றன.

Exit mobile version