கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக தலைமையில் தான் ஆட்சி என்றும், ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார்.
ஆனால் இன்று, தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்களிப்பது குறித்து, திமுக தலைவர் ஸ்டாலினும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் முடிவெடுப்பார்கள் என்று மழுப்பலாக அமைச்சர் பதிலளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சியில் பங்கு குறித்து ஏற்கெனவே கருத்து தெரிவித்து விட்டதாகக் கூறினார். என்றாலும், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை சொல்வது போல, திமுக தலைவரும், அவர்களின் தலைவரும் அதுபற்றி முடிவெடுப்பார்கள் என்றார். 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரையே மத்திய பிஜேபி அரசு நீக்கிவிட்டதை சுட்டிக்காட்டினார். சொத்துக் குவிப்பு போன்ற எந்த வழக்கானாலும் திமுக அதை எதிர்கொள்ளும் என்றும் பெரியசாமி பதிலளித்தார்.
