நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.இரு அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி வதோதராவில் நடைபெற்றது.
முதலில் களமிறங்கிய நியூசிலாந்த் அணியில் கான்வே, நிக்கோலஸ், மிட்செல் ஆகியோர் அரை சதம் அடித்தனர். இதனால் 50 ஒவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்த் 300 ரன்களை குவித்தது.
இதை தொடர்ந்து 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சுப்மன் கில். விராட்கோலி, ஸ்ரேயஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த கோலி 83 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கே.எல்.ராகுலின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 49 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 306 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

















