20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இயக்கப்பட்ட மூன்று பேருந்துகள் பழமை மாறாத வகையில் வடிவமைக்ப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் ‘சென்னை உலா’ என்ற பெயரில், அண்ணா சதுக்கத்தில் இருந்து, முக்கிய பகுதிகளான விவேகானந்தர் இல்லம், வள்ளுவர் கோட்டம், எழும்பூர் அருங்காட்சியகம், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட 17 இடங்களுக்கு செல்ல உள்ளது. இதன் சேவையை அமைச்சர் சிவசங்கர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை உலா பேருந்துகள் வார இறுதி நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும், மற்ற நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இதற்கான கட்டணமாக 50 ரூபாய் நிர்ணம் செய்யப்பட்டுள்ளதாகவும், அரை மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த பேருந்து சேவை இயக்கப்படும் என்றும் சிவசங்கர் கூறினார்.
