தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அண்ணாமலை, பாரம்பரிய நிகழ்வான உரியடியில் கலந்துகொண்டு பானையை நேர்த்தியாக உடைத்தார்.
1300க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, பணம், பரிசுப் பொருள்கள் கொடுத்து கூட்டத்தை சேர்த்து, பொங்கல் விழாக்களை அரசியல் விழாவாக திமுக அரசு கொண்டாடுவதாக குற்றம்சாட்டினார்.
