தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்துவர்களுடனான நேர்கானல் சென்னை அதிமுக தலைமை கழகத்தில் வரும் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த நேர்கானல் மாற்றி அமைக்கப்பட்டு, பன்னிரண்டு மற்றும் 24-ம் தேதிகளில் நடைபெரும் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
12-ம் தேதி விருதுநகர்,கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,திருச்சி, பெரம்பலூர், அரியலூர்,கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் விருப்ப மனு அளித்தவர்களுடன் நேர்கானல் நடத்தப்பட உள்ளது.
இதே போல் 24-ம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, தென்காசி,திருவண்ணாமலை,வேலூர், ராணிப்பேட்டை, திருப்பதூர் மாவட்டங்களில் விருப்ப மனு அளித்தவர்களுடன் நேர்கானல் நடத்தப்படும் என்றும் அதிமுக தலைமைகழகம் அறிவித்துள்ளது.
