உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

மன்னார்குடியில் ஐந்து சிவ ஆலயங்களின் உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் இரவு வெகு விமர்சையாக நடத்தப்பட்டது.

மார்கழி மாதத்தில் சைவ சமயத்தில் திருவாதிரை மிக முக்கிய தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐந்து சிவ ஆலயங்களின் உற்சவமூர்த்திகள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக பிரகன் நாயகி அம்பாள் சமேத ஜெயம் கொண்ட நாதர், பெரியநாயகி அம்பாள் சமேத கைலாசநாதர், மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாத சுவாமி, காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர், உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலைநாதர் ஆகிய ஐந்து கோயில்களின் நடராஜர் சுவாமிகளும் தேரடி திடலுக்கு சிறப்பு அலங்காரங்களுடன் ஊர்வலமாக வந்து அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கைலாச வாத்தியங்கள் முழங்க சாமரம் வீசியபடி கோவில் யானை செங்கமலம் சாமிகளை சுற்றி வந்தது. பின்னர் 5 சுவாமிகளுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ நாமம் முழங்க வழிபட்டனர்.

Exit mobile version