ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விரிவாக்கப் பணிகளை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா, திருச்சிகோட்ட மேலாளர் பாலக்ராம்நெகி, நேரில் ஆய்வு.
மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷனில் அம்ரித் பாரத்திட்டத்தின் கீழ் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதில் ஜங்ஷன் முகப்பு பகுதி, பார்க்கிங் ஏரியா, எக்ஸ்லேட்டர், லிப்ட் மற்றும் பிளாட்பாம்ங்கள் மேம்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் இன்று திருச்சிகோட்ட மேலாளர் பாலக்ராம்நெகி, மயிலாடுதுறை எம்.பி. வழக்கறிஞர் சுதா ஆகியோர் ஆய்வு செய்தனர். ஜங்ஷன் நுழைவுவாயில் பகுதியில் ஆர்ச் அருகில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும், ரயில்வே திருமண மண்டபம், பிளாட்பாம் ஆகியவற்றை ஆய்வுசெய்து பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர். பின்னர் திருச்சிகோட்ட மேலாளர் பாலக்ராம் நெகி கூறுகையில் ஜங்ஷனில் அம்ரித்பாரத் திட்டத்தில் நடைபெறும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பணிகளை விரைந்து இம்மாத இறுதிக்குள் முடித்து கொடுப்பதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் அனைத்து மேம்படுத்தப்படும் என்றார்.
பின்னம் எம்.பி.சுதா செய்தியாளர்களிடம் கூறுகையில் தஞ்சை-விழுப்புரம் இருவழிபாதையாகவும், தரங்கம்பாடி ரயில்சேவையை மீண்டும் இயக்க வலியுறுத்தியுள்ளோம். குறைந்தபட்ச கட்டண ஓட்டல்கள் அமைத்துகொடுக்க வேண்டும், காரைக்குடி ரயிலை மயிலாடுதுறையில் இருந்து இயக்குவதற்கு கோரிக்கை விடுத்துள்ளோம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்கள். அந்தோதயா ரயில் சீர்காழியில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுத்த கோட்ட மேலாளருக்கு மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துகொள்கிறோம். இன்டர்சிட்டி ரயிலை நிரந்தரமாக இயக்கவும், வந்தே பாரத் ரயில் இயக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அம்ரித்பாரத் திட்ட பணிகள் 80 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. சீர்காழி, குத்தாலம் ரயில் நிலையங்களை அம்ரித் பாரதி திட்டத்தில் புனரமைக்க கோரிக்கை வைத்துள்ளளேன் என்றார். , உடன் முதன்மை திட்ட பணி மேலாளர் சந்திரசேகரன், முதுநிலை கோட்ட வணிக மேலாளர் ரதிபிரியா, முதுநிலை கோட்ட மின்பொறியாளர் பிரசாத்சிறில், நகராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர் உடனிருந்தனர்.














