மூன்றாவது தலைமுறையாக தை 2ம் தேதி பொங்கல் விழா – கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்

சீர்காழி அருகே மூன்றாவது தலைமுறையாக தை 2ம் தேதியான இன்று பொங்கல் விழாவை கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருநகரி கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தை மாத பிறப்புக்கு முதல் நாள் ஏற்பட்ட கலவரம், அதனை ஒட்டி நடந்த நகை மாயமான சம்பவம் தொடர்பாக ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் கொண்டு வைத்துள்ளனர். பொங்கல் பண்டிகை என்பதால் போலீசார் மனிதாபிமான அடிப்படையில் திருநகரி கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தினரின் ஜாமினோடு தை 2ம் தேதி விடுவித்துள்ளனர். அன்று முதல் அக்கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தை 2ம் தேதி பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர். இதனை மாற்றி தை 1ம் தேதி பொங்கலிட்டால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதால் வழக்கத்திற்கு மாறாக தை 2ம் தேதியிலேயே பொங்கல் விழாவாக கடந்த மூன்று தலைமுறைகளாக கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தை மாதம் 2ம் தேதியான இன்று திருநகரி கிராம மக்கள் குடும்பமாக தங்கள் வீடுகளின் முன்பு மறைப்பு அமைத்து, விளக்கேற்றி, கரும்புடன் பொங்கல் வைத்து பொங்கல் பொங்கியதும் பொங்கலோ பொங்கல் என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோஷமிட்டபடி சூரிய பகவானுக்கு படையல் இட்டு மகிழ்ந்தனர்.

Exit mobile version