மயிலாடுதுறை அருகே நீடூரில் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மற்றும் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்துக் காண்பித்து மும்மதங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் அசத்தினர். கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்தவர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
கிறிஸ்மஸ் பண்டிகை நாடு முழுவதும் நாளை மறு தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் மயிலாடுதுறையை அடுத்த நீடூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பள்ளித்தலைவர் அருண்குணாளன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டி.இ.எல்.சி இம்மானுவேல் ஆலய பங்குத்தந்தை தினகரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் என மும்மதங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள்; மாணவர்கள் ஒன்று சேர்ந்து இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மற்றும் வாழ்க்கை வரலாற்றை நாடகத்தை அரங்கேற்றி அனைவரையும் கவர்ந்தனர். தொடர்ந்து, மாணவர்களின் பரதநாட்டியம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழாவில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த இருவர், மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதில் மாணவ-மாணவிகள் உற்சாகமாக கிறிஸ்மஸ் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
