விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக திரண்ட ரசிகர்களால், நிகழ்ச்சி நடக்கும் மலேசிய சாலையில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடக்கிறது. கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடக்கிறது. உலகளவில் 15 மிகப்பெரிய மைதானமாக இது திகழ்கிறது.
அதில் கலந்து கொள்வதற்காக விஜய், பூஜா ஹெக்டே, அனிருத், இயக்குனர் நெல்சன், நடிகர் நாசர் உள்ளிட்ட பலர் நேற்றே மலேசியாவுக்கு சென்றுவிட்டனர். இம்முறை இசை வெளியீட்டு விழாவாக நடத்தாமல் தளபதி கச்சேரி என்கிற பெயரில் கான்செர்ட்டாக நடத்தப்பட உள்ளது. தற்போது புக்கட் ஜலீல் ஸ்டேடியம் அருகே ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 80 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
