தமிழகத்தை போன்று புதுச்சேரியையும் மத்திய அரசு புறக்கணிப்பதாக த.வெ.க தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
கரூர் சம்பவத்திற்கு பின்னர், முதன் முறையாக புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், விஜய் கலந்து கொண்டார். திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழ்நாட்டை போன்று புதுச்சேரியும் தமக்கு ஒன்று தான். புதுச்சேரி மக்களுக்காகவும் குரல் கொடுப்பேன் என தெரிவித்தார்.
1977 ஆம் ஆண்டு தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியை பிடித்திருந்தாலும், அதற்கு முன்னதாக 74 ஆம் ஆண்டே, புதுச்சேரியில் ஆட்சியை பிடித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தமிழக மக்களுக்கு ரோல் மாடலாக இருந்த, இங்குள்ள மக்களை மறக்க முடியுமா என்றும் விஜய் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் உள்ள திமுக ஆட்சியை போன்று, புதுவை ஆட்சியாளர்கள் கிடையாது எனக் கூறிய விஜய், மாற்றுக்கட்சி நிகழ்ச்சி என்றாலும், சிறப்பான பாதுகாப்பை அளித்த காவல்துறைக்கும், புதுச்சேரி முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் விஜய் கூறினார்.
















