தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரமாக இருந்து தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் தனது கடைசி படமாக ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்து உள்ளார்.இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் விமர்சையாக நடைபெற்றது இந்த விழாவில் விஜய் பங்கேற்ற நிலையில் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து தனி விமான மூலம் சென்னை வந்தடைந்தார்.
விஜயை பார்ப்பதற்காக சென்னை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.
விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயை பார்த்து அவரது கட்சி நிர்வாகிகள் ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டனர்.
காரில் ஏறுவதற்கு சென்ற விஜய்யை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் அவரது பாதுகாவலர்கள், சென்னை விமான நிலைய போலீசார், மத்திய தொல் பாதுகாப்பு படை போலீசார் அவரை பத்திரமாக அழைத்து வந்து வந்தனர். அப்போது விஜய் கார் அருகே வந்த போது கூட்டத்தில் சிக்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரது பாதுகாப்பு அதிகாரிகள் போலீசார் அவரை மேலே தூக்கி காரில் ஏற்றினர்.
அதன் பின்னர் சென்னை விமான நிலையத்திலிருந்து தனது காரில் நீலாங்கரையில் உள்ள இல்லத்திற்கு சென்றார். இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
