சென்னை பட்டினப்பாக்கத்திலுள்ள விஜய் இல்லத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில், நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், பொதுசெயலாளர் ஆனந்த், கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், தேர்தல் மேலாண்மை பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தங்களுடன் கூட்டணியில் இணையும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்று விஜய் ஏற்கனவே அறிவித்துள்ளார். எனினும், இதுவரை எந்த கட்சியினரும் விஜயுடன் கூட்டணி சேரவில்லை. இந்நிலையில், கூட்டணி தொடர்பாகவும், தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பது, அதில் யாரை இடம்பெறச் செய்வது என்பது குறித்து, மாநில நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசித்தாகத் தெரிகிறது.
















