மயிலாடுதுறை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது – 75,378 பேர் நீக்கம் செய்யப்பட்டு 7,08,122 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது , வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்குப் பிறகு 75,378 பேர் நீக்கம் செய்யப்பட்டு 7,08,122 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டார். இதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்பு 7,83,500 வாக்காளர்கள் இடம்பெற்று இருந்தனர். பின்னர் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்குப் பிறகு 75,378 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் மயிலாடுதுறை , பூம்புகார் , சீர்காழி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளையும் ஒருங்கிணைத்து ஆண் வாக்காளர்கள் 3,51,453 நபர்களும், பெண் வாக்காளர்கள் 3,56,623 நபர்களும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 46 நபர்களும் என மொத்தம் 7,08,122 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் 862 வாக்குச்சாவடி மையங்கள் இருந்த நிலையில், 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதியதாக 88 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு, தற்பொழுது 950 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

Exit mobile version