மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் ஆறுபாதி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்., எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 8-வது சுற்று கால் மற்றும் வாய்நோய்; தடுப்பூசி முகாம் இன்று(29.12.2025) முதல் 28.01.2026 வரை கிராமங்கள் வாரியாக தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் ஒரு லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடுவதற்கு தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்நோய் மிககொடிய வைரஸ் கிருமிகள் மூலம் பிளவுபட்ட குளம்புகள் உடைய பசு, எருமை, வெள்ளாடு போன்ற இனங்களை எளிதல் தாக்கக்கூடிய ஒன்று. மேலும் இது காற்று மற்றும் தண்ணீர் மூலம் மிக விரைவாக பரவக்கூடிய தன்மை உடையது. இந்நோய் வராமல் தடுப்பதற்கு கால்நடைகளுக்கு வருடத்திற்கு இரண்டுமுறை தடுப்பூசி மேற்கொள்வது சிறந்த வழியாகும்.மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி முகாம் இன்று துவங்கியது. தரங்கம்பாடி தாலுகா ஆறுபாதி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் தடுப்பூசி முகாமை துவங்கி வைத்தனர். மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் இம்முகாம் நடைபெற உள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர்;; இந்த முகாமினை பயன்படுத்திக் கொண்டு தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.தொடர்ந்து, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கால்நடை வளர்ப்போர்களுக்கு கால்நடைகளுக்கான தாது உப்புக் கலவைகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வழங்கினார்.இம்முகாமில் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் மரு.அன்பரசன், மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
