வெனிசுலா அதிபர் மதுரோவை சிறைப்பிடித்த உடன், அந்நாட்டின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. அந்த எண்ணெய்களை உலக நாடுகளுக்கு விற்பனை செய்யும் வணிகத்தையும் அமெரிக்க தொடங்கிவிட்டது.
வெனிசுலாவிலிருந்து தினமும் 50 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை எடுத்து விற்போம் என்றும், தாங்கள் இழந்ததை மீண்டும் எடுத்து கொண்டதாகவும், டிரம்ப் கூறியிருந்தார்.
இதனிடையே, வெனிசுலா கச்சா எண்ணெய்யை இந்தியாவுக்கு விற்க தயாராக இருப்பதாக, அமெரிக்க எரிசக்தித்துறை அமைச்சர் கிறிஸ்டோபர் ரைட் கூறியுள்ளார். ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், அபராத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

















