நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி மற்றும் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், நடிகர் சத்யராஜ். நடிகை தேவயானி உள்ளிட்ட திரைபிலங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தும் முன்னோடி திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த மகளிரின் அனுபவங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, ‘வெல்லும் தமிழ்ப்பெண்கள்’என்ற விழாவும் நடைபெற்றது.
இதில், பல பெண்கள் கலந்து கொண்டு தங்களது துறைகளில் படைத்த சாதனைகள் குறித்த விபரங்களை எடுத்துக்கூறினர். நிகழ்ச்சியில் 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தினை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதற்கான வங்கி அட்டையையும் அவர் வழங்கினார்.
