கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருடன் தனக்க எந்தவித கருத்துவேறுபாடும் இல்லை என்றும், வரும் 2028-ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைக்க வேண்டும் என்று நோக்கிலேயே இருவரும் தொடர்ந்து பயணிப்பதாகவும் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து சித்தராமையாவை மாற்றி விட்டு, டி.கே.சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என்று அவருடைய ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர். இந்தநிலையில், காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமாரிடம் பேச்சு நடத்தினர்.
இந்தநிலையில், சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, தங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. தாங்கள் டெல்லி செல்லவிருப்பதாகவும், நாளை பொதுச் செயலாளர் வேணுகோபாலை சந்திக்க இருப்பதாகவும் கூறினார். அமைச்சரவை மாற்றம் குறித்து கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ, அதைப் பின்பற்றுவோம் என்றார்.














