பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து திட்டமிட்டபடி ஆறாம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும், மயிலாடுறையில் நடைபெற்ற
போட்டோ ஜியோ .கண்டன ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்:-
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையாக பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்திருந்தது. ஆட்சி பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் நிறைவடைந்தும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரச அமல்படுத்தவில்லை மேலும் சரண் விடுப்பு நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும் ஏழாவது ஊதியக்குழு நிர்ணயத்தில் 21 மாதம் நிலுவை தொகையினை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசை கண்டித்து பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன அதன் ஒரு பகுதியாக, இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். கூட்டத்தில் பங்கேற்று பேசிய அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் திரு அமிர்த குமார், ஓய்வூதியம் குறித்தான தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் திட்டமிட்டபடி ஆறாம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
