திருவள்ளூர் அருகே பூர்வீக சொத்துக்களை முறைகேடாக பட்டா மாற்றிய சொத்துக்களின் பட்டாவை ரத்து செய்து கூட்டுப் பட்டா வழங்க வேண்டும் என்றும் முதியவர் என்றும் பார்க்காமல் தாக்கும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் 86 வயது முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அடுத்த அகரம் கண்டிகையை சேர்ந்தவர் சுப்பிரமணி(86). இவரது மனைவி பொன்னம்மாள் (75). சுப்பிரமணியின் கொள்ளு தாத்தாவான சின்ன ஆனைக்குட்டி என்பவர் மிகப்பெரிய நில சுவான்தாரர் ஆவார். அவருக்கு வாரிசுதாரர்களான செல்லப்பன், சிங்காரம், வீராசாமி, ஜின்னு, அப்பு ஆகியோர் சின்ன ஆணைக்குட்டி மறைவிற்கு பின் வாய்மொழியாக பாகம் பிரித்து ஆண்டு அனுபவித்து வந்தனர். இதில் சிங்காரம் என்பவர் சுப்பிரமணியின் தாத்தா ஆவார். சிங்காரத்திற்கு வரதப்பன் என்கிற ஒரே ஒரு ஆண் வாரிசு மட்டும் இருந்தார் . இந்தநிலையில் தந்தை வரதப்பன் மறைவிற்கு பிறகு அந்த சொத்துக்களை சுப்பிரமணி மற்றும் அவரது அண்ணன் கணேசன் ஆகியோர் பராமரித்து வந்தனர். இந்நிலையில் கணேசன் இந்த சொத்துக்களை அவரே பராமரித்து வந்ததன் காரணமாக அதனை சாதகமாக பயன்படுத்தி தந்தை வரதப்ப ரெட்டி பெயரில் உள்ள தனிப்பட்டாக்களை முறைகேடாக எந்த ஆவணமும் இன்றி தனது பெயருக்கு மாற்றி உள்ளார் மேலும். வாரிசுதாரர்களின் பெயரில் இருந்த கூட்டு பட்டாக்களையும் முறைகேடாகவும் சட்டவிரோதமான வழியிலும் எந்த ஆவணமும் இன்றியும் தனது பெயரில் தனிப்பட்டாவாகவும் மாற்றம் செய்துள்ளார். இந்த விவரங்கள் அனைத்தும் படிப்பறிவற்ற ஆதரவற்ற தனக்கு தெரியாத நிலையில் மூத்த சகோதரரான கணேசனும் தொடர்ந்து அவரது மறைவிற்குப் பிறகு அவரின் ஆண் வாரிசான ராஜாவும், ராஜாவின் மறைவிற்குப் பிறகு அவரது வாரிசான ஜெயின் என்பவர் முறைகேடாகவும் சட்டவிரோதமாகவும் எந்தவித ஆவணமும் இன்றி பெற்ற தனிப்பட்டாக்களை கொண்டு விற்பனை செய்து வருகின்றார்.
எனவே எந்த வித ஆவணங்களும் இன்றி முறைகேடாகவும் சட்டவிரோதமாகவும் பட்டா பெயர் மாற்றம் செய்து உள்ளதற்கு ஆதாரமாக அரசாங்கத்தின் முந்தைய அடங்கல் பதிவேடுகள் மற்றும் தற்போதைய பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் தந்தை வரதப்பன் இறப்பு சான்றிதழ், அண்ணன் கணேசன் மற்றும் கந்தசாமி ஆகியோரது வாரிசு சான்றிதழ் மற்றும் வாரிசுதாரர்கள்குறித்த விவரங்களையும் தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் சுப்பிரமணி புகார் மனு அளித்தார். தந்தை வரதப்பன் பெயரிலிருந்த நிலங்களுக்குறிய பட்டாக்கள் அனைத்தையும் அண்ணன் கணேசன் மற்றும் அவரது வாரிசுகள் தங்களது பெயருக்கு பெயர் மாற்றம் செய்ததினால் எனக்குரிய சட்டபூர்வமான பங்கு சொத்தினை எனது பெயருக்கு மாற்றி தரக்கோரி கேட்கும் போதெல்லாம் மூத்த சகோதரர் கணேசனின் வாரிசுகள் மூத்தவர் முதியவர் என்று கருதாமல் என்னையும் எனது மனைவியையும் தாக்கியுள்ளனர் இது தொடர்பாக வெங்கல் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளோம். எனவே தந்தை வரதப்பன் பெயரிலுள்ள தனிப்பட்டாக்களை முறைகேடாகவும் எந்தவித ஆவணமும் இன்றியும் தனது மூத்த சகோதரன் மறைந்த கணேசன் அவர்களின் பெயருக்கு மாற்றியும் தந்தை வாரிசுதாரர்களின் பெயரிலிருந்து கூட்டு பட்டாக்களை கணேசன் பெயரில் தனிப்பட்டாவாகவும் பின்னர் அவர்களது வாரிசான ராஜா மற்றும் ஜெயின் ஆகியோர் பட்டாவினை தங்கள் பெயருக்கு மாற்றம் செய்ததனை அரசாங்கம் வருவாய் பதிவேடுகளின் அடிப்படையில் ஆராய்ந்து அதன் அடிப்படையில் முறைகேடாகவும் சட்ட விரோதமாகவும் மற்றும் எந்தவித ஆவணமும் இல்லாமல் வழங்கப்பட்டுள்ள பட்டாக்களை ரத்து செய்து அவரவருக்குரிய பங்கு நிலங்களுக்குரிய தனி பட்டாவாகவோ அல்லது கூட்டு பட்டாவாகவோ வழங்கிட வேண்டும் என்றும், எங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நபர்களிடமிருந்தும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் முதியவர் சுப்பிரமணி தனது மனைவியுடன் நேரில் வந்து புகார் அளித்தார். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
